க்ரிஷி ஜாக்ரன் வளர்ந்து வரும் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான செய்திகளை உடனுக்குடனாக க்ரிஷி ஜாக்ரன் தமிழ் மூலம் தெரிவித்து வருகிறது. மேலும் பார்மர் தி ஜெர்னலிஸ்ட் என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி விவசாயிகளுக்கு மிக விரைவான செய்திகளை தங்களது விவசாயிகள் மூலமாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக, க்ரிஷி ஜாக்ரன் தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து சமீபத்திய தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்பு யோசனைகளையும் வழங்கி வருகிறது. மேலும் இந்த புதிய தொடக்கமான க்ரிஷி ஜாக்ரன் பார்மர் தி ஜெர்னலிஸ்ட் நிகழ்ச்சியில் நேரடியாக மக்கள் அதாவது விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் தளமாக அமையும்.
நீங்கள் ஒரு விவசாயியாக இருந்து உங்களது மாவட்டம், வட்டம், கிராமத்தில் நடக்கும் விவசாயம் தொடர்பான வளர்ச்சிகள், நிகழ்வுகள், குறைநிறைகளை தெரியப்படுத்த க்ரிஷி ஜாக்ரனுடன் இணையுங்கள்.
எங்களுடன் இணைய நீங்கள் செய்ய வேண்டியவை:
1) மக்களை கவரும் வகையில் தரமான நல்ல வீடியோ விவசாய செய்திகளை தரும் வகையில் தயார் செய்ய வேண்டும்.
2) வீடியோவின் நீளம் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும் மற்றும் முற்றிலுமாக க்ரிஷி ஜாக்ரனை சார்ந்து இருக்க வேண்டும்.
3) நீங்கள் அனுப்பிய பிறகு அனுப்பிய விடியோவை பயன்படுத்துவதற்கான முழு அதிகாரமும் க்ரிஷி ஜாக்ரனிடம் உள்ளது.
4) மேலும் நீங்கள் விவசாயம் சம்மந்தப்பட்ட கட்டுரைகள் செய்திகளையும் அனுப்பலாம் அவை எங்களது டிஜிட்டல் பக்கங்களில் பதிவு செய்யப்படும்.
உங்களுக்கு கிடைக்கும் சன்மானம்
1) ரொக்க பரிசுகள்
நீங்கள் அனுப்பும் 30 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 5000 வழங்கப்படும்.
நீங்கள் அனுப்பும் 20 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 2500 வழங்கப்படும்.
நீங்கள் அனுப்பும் 10 வீடியோக்கள் அல்லது கட்டுரைகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும்.
குறிப்பு: எங்களது குழுவால் தேர்வு செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் வீடியோக்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு பரிசு தொகை வழங்கப்படும்.
2) 6 மாத காலத்திற்குள் 15 கட்டுரைகள்/வீடியோக்கள் வெற்றிகரமாக வழங்கும் விவசாய பத்திரிக்கையாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
முக்கியமான தொடர்புகள்:
1) பதிவு செய்ய:https://krishijagran.com/ftj
2) எங்கள் குழுவுடன் தொடர்புகொள்ள: 9891899197, 9953756433, 9313301029
3) வாட்ஸ் அப் : 9818893957
4) உங்களது வீடியோக்கள்/கட்டுரைகளை பகிரும் தளம்(பதிவு செய்த பின்னரே): journalist@krishijagran.com
குறிப்பு: நீங்கள் அனுப்பி தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வீடியோக்கள்/ கட்டுரைகளுக்கான அஞ்சல் ஒப்புதலைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க...
இன்று தொடங்கப்பட்டது க்ரிஷி ஜக்ரானின் 'பார்மர் தி ஜர்னலிஸ்ட் '
Share your comments