வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை தொலைபேசி மூலம் தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையின்றி வேளாண் பணிகள்
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொதுமுடக்கக் காலத்தில் விவசாயிகள் தடையின்றி வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகளைப் பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வேளாண் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நுண்ணூட்டம், உயிா் உரங்கள் இருப்பில் உள்ளன.
இதை பெற்றிட காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மையங்கள் திறந்திருக்கும். அனைத்து தனியாா் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். விவசாயிகள் தங்களின் வயல்வெளிப் பிரச்னைகள், பூச்சி நோய்த் தாக்குதல் பற்றிய சந்தேகங்களுக்கு வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம்.
வேளாண் அலுவலர்களை தொடர்புக்கொள்ள
தொலைபேசி விவரம்: நாமக்கல்- அன்புச்செல்வி - 99655 57050, புதுச்சத்திரம்-பேபிகலா - 94875 71969, எருமப்பட்டி - இந்திராணி- 97519 85515, மோகனூா் -ஜெயமாலா - 96007 96309, ராசிபுரம்-சித்திரைசெல்வி - 99655 93026, நாமகிரிப்பேட்டை-ராஜேஸ்வரி - 89036 33164, வெண்ணந்தூா்-யுவராஜ் - 99651 58048, எலச்சிபாளையம் -லோகநாதன் - 88702 88415, கொல்லிமலை - கவிதா - 99655 93300, மல்லசமுத்திரம்-தனம்- 98424 58179, திருச்செங்கோடு- ஜெயமணி- 98944 02957, பள்ளிபாளையம்-கலைச்செல்வி - 88702 88416, பரமத்தி-ராதாமணி- 98424 27788, கபிலா்மலை- கோவிந்தசாமி- 99948 81725
கள்ளக்குறிச்சி விவசாயிகளுக்கான தொடர்பு எண்
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நெல் விதைகள், உயிர் உரங்களை மானிய விலையில் வாங்கி பயனடைலாம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர்களை தொலைபேசி மூலம் தொடர்புக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகன்நாதன் செய்திகுறிப்பில், சொர்ணவாரி பருவத்திற்கான வேளாண் விரிவாக்க மையங்களில் காலை 12 மணி வரை வேளாண் பணிகளுக்கு தேவையான விதை, உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்களை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களின் மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.
வேளாண் உதவி இயக்குனர்கள் கள்ளக்குறிச்சி (தரக்கட்டுப்பாடு) 94438 44332, கள்ளக்குறிச்சி 94438 41066, சின்னசேலம் 94864 79754, சங்கராபுரம்-82481 10335, ரிஷிவந்தியம் 99406 69943, தியாகதுருகம் 96007 70410, திருக்கோவிலுார்-97506 82505, திருநாவலுார் 86101 87822, உளுந்துார்பேட்டை 88254 57582 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், சொர்ணவாரி பருவத்திற்கு தேவையான கோ(ஆர்)51, ஏடிடி(ஆர்)45, ஏடிடி 37 ஆகிய நெல் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இதனை விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேளாண் சார்ந்த ஆலோசனைகளை வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் பெறலாம் - வேளாண் துறை தகவல்!!
Share your comments