1. விவசாய தகவல்கள்

பயிர்களின் தரத்தை உயர்த்தும் பாசன நீரை பரிசோதிக்கும் வழிமுறை!

KJ Staff
KJ Staff
Irrigation
Credit : வேளாண்மை பொறியியல் துறை

பயிரின் வளர்ச்சிக்கு மண் பரிசோதனையைப் (Soil Test) போல பாசன நீர் பரிசோதனையும் அவசியம். நிலம் வளமானதாக இருந்தாலும், பாசனத்துக்கு பயன்படுத்தும் நீர் மோசமானதாக இருந்தால் மண்ணில் பயிர்கள் (Crops) பயிரிட தகுதியற்றதாக மாற்றி விடும். ஆகவே, பாசன நீரை பரிசோதிப்பது மிக அவசியம். விவசாயிகளுக்கு உதவும் வகையில் பரிசோதனைக்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

பரிசோதிக்க தண்ணீரை எடுக்கும் முறை:

பம்ப்செட் (Pumpset) உள்ள கிணற்றிலிருந்து நீர் பரிசோதிப்பதாக இருந்தால் மோட்டாரை அரைமணி நேரம் ஓடவிட வேண்டும். கிணற்றின் நடுவில் இருந்து ஒரு லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்ப வேண்டும். சுத்தமான பாட்டிலில்இதே தண்ணீரால் கழுவிய பின் பிடித்து பரிசோதிக்க வேண்டும். பம்ப்செட் இல்லாத கிணற்றில் மேல்மட்ட நீரை எடுக்காமல் ஆழத்தில் உள்ள நீரை எடுத்து பாட்டிலில் சேகரிக்க வேண்டும்.

20 ரூபாய் கட்டணம்:

பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர் (Farmer Name), முகவரி, சர்வே எண், பயிர் சாகுபடி (Crop Cultivation), அலைபேசி எண் (Contact number) போன்ற விவரங்களுடன் மண் பரிசோதனை கூடம் (Soil Testing Laboratory) அல்லது வேளாண் அறிவியல் மையத்தில் கொடுக்க வேண்டும். நீரில் உள்ள உவர்நிலை (Salinity), களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், சோடியம், குளோரைடு, சல்பேட் மற்றும் நீரின் கடினத்தன்மை, நீரின் ஈர்ப்பு விகிதம் (Gravity ratio of water) ஆகியவை பரிசோதிக்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் பாசன நீரை பரிசோதித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆகையால், மிகக் குறைந்த கட்டணத்தில் வேண்டிய நேரத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:

சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை,
94435 70289

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன்! தமிழகத்தில் கடற்பாசி பூங்கா!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்! கோழி வளர்ப்போர் பயன்பெற அழைப்பு!

English Summary: Method of testing irrigation water to improve the quality of crops! Published on: 02 February 2021, 05:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.