1. விவசாய தகவல்கள்

முருங்கை சாகுபடியில் பிசினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

R. Balakrishnan
R. Balakrishnan

Moringa Resin

வறண்ட நிலத்திலும் வற்றாமல் இலை, பூ, காய்களை தரும் முருங்கை வீட்டுத்தோட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. முருங்கை மரமோ, செடியோ காய்க்கும் பருவத்தில் ஈ வகையைச் சார்ந்த பூச்சியால் இளம் காய் பருவத்தில் ஆரம்பித்து காய் முதிர்ச்சியுறும் வரை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இளம் காய்களின் நுனிகளில் புழுக்கள் நுழைந்து ஒரு பிசின் போன்ற திரவத்தை சுரக்கிறது.

முருங்கை (Moringa)

பாதிக்கப்பட்ட காய்கள் சுருங்கியும் கருப்பு நிறத்திலும் காய்கள் காய்ந்து வெடித்த நிலையிலும் காணப்படும். இதை சமைத்தால் கசப்புத் தன்மை ஏற்படும். இந்த ஈக்களானது மஞ்சள் நிறத்தில் சிவப்பு கண்களுடன் காணப்படும். காயின் வரிகளில் அதிக முட்டைகளை இடுவதால் புழுக்களாக மாறி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட முருங்கை காய்களை சேகரித்து குழி தோண்டி புதைக்க வேண்டும். யூக்லிப்டஸ் எண்ணெய், வினிகர், நொதித்த பழச்சாறுகள் கொண்ட கவர்ச்சி பொறிகளைக் கொண்டு ஈக்களை ஈர்த்து கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 இனக்கவர்ச்சி பொறி தேவைப்படும். முருங்கை செடிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் உழுது கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். செடிகள் பூக்க ஆரம்பித்தவுடன் 5 சதவீத வேப்பங்கொட்டை சாற்றை 15 நாள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி மாலத்தியான் அல்லது அசாடிராகிடின் 2 மில்லி வீதம் கலந்து 15 நாள் இடைவெளியில் பூக்கும் காலத்தில் இருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சிமருந்து பயன்படுத்தினால் மருந்து தெளித்த 2 நாட்களுக்குப் பின் காய்களை அறுவடை செய்யலாம்.

மனோகரன், சஞ்சீவ்குமார் மணிகண்டன்
உதவி பேராசிரியர்கள்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி
94420 39842

மேலும் படிக்க

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்: கால்நடை மருத்துவர் அறிவுரை!

தண்ணீர் இருந்து என்ன பயன்? சரியான விலை இல்லையே!

English Summary: Methods of controlling resin in moringa cultivation!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.