1. விவசாய தகவல்கள்

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி-ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural Inputs Product Training - Organized by Isha Agricultural Movement!
Credit : Civil Eats

இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் (organic fertilizers ) களப் பயிற்சி (Training) திருநெல்வேலியில் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈஷா விவசாய இயக்கம் (Isha Agricultural Movement)

தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிர் வாரியான சாகுபடி முறை பயிற்சி, பூச்சி மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


இதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவில் செட்டிக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில், இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சிறப்பு பயிற்சிகள் (Special exercises)

இந்தப் பயிற்சியில் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கமும், களப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை உருவாக்க வேண்டும்!

விவசாயிகள் போராட்டத்தால் ரூ.5000 கோடி இழப்பு- CAIT தகவல்!

English Summary: Natural Inputs Product Training - Organized by Isha Agricultural Movement! Published on: 19 December 2020, 08:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.