1. விவசாய தகவல்கள்

இயற்கை முறை தேயிலை சாகுபடி: சுற்றுலாப் பயணிகளின் ரசிக்கும் கொழுக்கு மலை!

R. Balakrishnan
R. Balakrishnan

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொழுக்கு மலை. இந்த மலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக அழைக்கப்படுகிறது. கேரள - தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த கொழுக்குமலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டமும் இங்கு தான்.

தேயிலை சாகுபடி (Tea Cultivation)

இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்யக்கூடிய இடமும் கொழுக்குமலைதான். இங்கு சூரிய உதயம் காண்பது இந்த இடத்தின் சிறப்பு. அதிகாலையில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியன் உதிப்பதை காண்பது நம்மை சொர்க்கத்தில் இருப்பது போல் உணரச் செய்யும்.

கொழுக்கு மலைக்கு செல்ல மூணாறிலிருந்து பயணம் செய்து சூரியநெல்லி அடையவேண்டும். அங்கிருந்து 12 கிலோமீட்டர்  தேயிலைத் தோட்டத்தில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே உள்ள கரடுமுாரடான பாதை வழியாக செல்வது என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைகிறது. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துரை அதிகாரி தெரிவித்தனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்!

தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்!

English Summary: Natural Tea Cultivation: The Kolhuku Malai for Tourists to Enjoy! Published on: 11 May 2022, 06:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.