ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரப்பகுதியில், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் (National Agriculture Development Programme) 5 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு கொண்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட காடமங்கலம், பொந்தம்புளி, நீராவி, கள்ளிக்குளம், செங்கப்படை, நகரத்தாற்குறிச்சி வருவாய் கிராமங்களில் 70 ஹெக்டேர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Credit : Oneindiatamil
இத்திட்டத்தின் ஒருபகுதியாக காடமங்கலம் வருவாய் கிராமத்தில் தரிசாக உள்ள கருவேல மரங்களை அகற்றி பயிர் சாகுபடிக்கு கொண்டு வரும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர் சாகுபடிக்கும் செலவின தொகைக்கு ஏற்ப மானியமும் வழங்கப்பட உள்ளது.
ஆய்வில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சேக்அப்துல்லா (மாநில திட்டம்), வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கெர்சோன்தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
PMKSY:சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம்- ஆனைமலை விவசாயிகளுக்கு அழைப்பு!!
Share your comments