பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில் அம்மாநில விவசாயிகள் அமைப்புகள் இணைந்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் (Legislative election)
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கின் லோக் பஞ்சாப் காங்கிரஸ்- பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய திருப்பமாக 22 விவசாய அமைப்புகள் சார்பில் என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.
வேட்பாளர் (Candidate)
இந்த புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி ஏன்? (Why the party?)
முன்னதாக வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டெல்லியில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆனால், விவசாயிகள் என்பதால், இவர்களை மத்திய அரசு புறக்கணித்தது. வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் சம்பவங்களுக்கும், விபத்துக்களுக்கும்கூட உடனடியாக கருத்து தெரிவிக்கும், பிரதமர் நரேந்திர மோடி, பல நாட்களாக தலைநகர் முடங்கியபோதிலும், மவுனம் காத்தார்.
ஆதரவு எப்படி? (How to support?)
இதற்கு விவசாயிகள் பின்புலத்தில் அரசியல் கட்சி இல்லாததேக் காரணம் என்பதால், எதிர்வரும் பஞ்சாப் தேர்தலில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்துவது என விவசாய அமைப்புகள் முடிவு செய்திருந்தன. இதன் அடிப்படையில் தற்போது புதியக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளின் கட்சிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க...
இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!
Share your comments