தேசிய பயிர் காப்பீட்டுக்கு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகள் இனி ஆன்லைன்மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இணையத்தில் மட்டும்
இது குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
காலக்கெடு
வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும். விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விபரங்கள்
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
15 நாள் அவகாசம்
விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் வேதனை
இவ்வாறு அந்த எழுத்துபூர்வமான பதிலில், மத்திய வேளாண் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், டிஜிட்டல்மயமாக்கல் என்ற பெயரில், விவசாயம் சார்ந்த நடைமுறைகளை இணையத்தின் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துவது, விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
அதேநேரத்தில், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, விவசாயிகளுக்கு உள்ள வசதிகளைக் கருத்தில்கொண்டும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியப் பிறதுவதை உறுதி செய்த பிறகுமே அரசு செயலில் இறங்குவது சிறப்பானதாக இருக்கும். எந்தவகையிலும், பயனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments