தென் ஆப்ரிக்காவில் வெங்காயப் பண்ணையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் வேலைக்கு இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை
கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம். அது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக, புயலும், வெள்ளமும் கேரளாவை வரிகட்டிக் கொண்டுத் தாக்கி வருகின்றன.
இதன் காரணமாகவும், கடவுளின் தேசம் என வருணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு வேலையைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கேரள அரசு சார்பில் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் தென்கொரியாவில் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டது.
இதில் எம்பிஏ பட்டதாரிகள் உட்பட 700 பேர் தென் கொரிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த தென் கொரிய வெங்காயப் பண்ணை தயாராக உள்ளது.
5,000 பேர் (5,000 people)
ஆனாலும் இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏனெனில், ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக இருந்தபோதிலும், அங்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை வேலைக்கு வருபவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பண்ணை நிர்வாகம் கூறியுள்ளது.
அச்சம்
இது ஒருபுறம் இருக்க, அங்கு நிலவும் மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருப்பதால், பலரும் விண்ணப்பிக்க அச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments