1. விவசாய தகவல்கள்

தொழில் அதிபராக வாய்ப்பு- மத்திய அரசின் உதவியுடன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Opportunity to become an entrepreneur - Free training

வேளாண் சிகிச்சை மையம் அமைத்து விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் இளைஞர்களைத் தொழில் அதிபர்களாக மாற்ற, இலவசப் பயிற்சி அளிப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எனவே இந்த பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு இளைஞர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பங்கை ஆக்கிரமித்து, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.அதில் முக்கியமானது வேளாண் சிகிச்சை மையம்.

இதன்மூலம் விவசாயிகளுக்கு அவர்களது விவசாயம் சார்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்க முடியும். இத்தகைய வேளாண் சிகிச்சை மையத்தை இளைஞர்கள் தொடங்க முன்வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இலவசப் பயிற்சி

அதேசமயம் இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடுகிறது. இத்தகைய வேளாண் சிகிச்சை மையத்தை தொடங்க 45 நாட்கள் இலவச பயிற்சியை மத்திய அரசு வழங்குகிறது.

அதன்படி, மத்திய விவசாய துறையின் தேசிய வேளாண்மை மற்றும் விரிவாக்க நிறுவனத்தால் இந்த பயிற்சி அளிக்கும் பொறுப்பு கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் ஸ்டெல்லா மேரிஸ் பயிற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண்மையில் பயன்படுத்தும் நவீன கருவிகள், விவசாயிகளின் தொழில் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதனை மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் வேளாண்துறை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி களப் பயிற்சியும் வழங்கப்படும் என்று பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சியில் இணைய கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்தை இளைஞர்கள் அணுகலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தகுதி குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

45 நாள் பயிற்சி

இதுதொடர்பாக பேசிய ஐ.நா சபையின் தொழில் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைமை ஆலோசகரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஜெபமாலை, இளைஞர்களுக்கு மிகச்சிறப்பான வாய்ப்பு. மத்திய அரசின் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 45 நாட்களும் அங்கேயே தங்கி கற்றுக் கொள்ளலாம்.

தங்குமிடம் இலவசம்

எந்தவொரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் எந்தெந்த விளைபொருட்களில் நல்ல லாபம் ஈட்ட முடியும், புதிதாக விவசாயத்தில் ஈடுபட வழிகாட்டுவது, இதற்காக மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் என்னென்ன, அவற்றை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டவர்களாக உருவாக முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!

உடல் எடைக் கூடினால் சம்பளம் கட்!

English Summary: Opportunity to become an entrepreneur - Free training Published on: 06 February 2022, 09:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.