1. விவசாய தகவல்கள்

பளபளக்கும் பட்டு உற்பத்தி- மானியவிலையில் கருவிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Pattu Manufacturing - Tools at Subsidized Prices!

விவசாயிகளுக்கு மானியத்துடன் தளவாட கருவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எத்தனைதான் விதவிதமான ஆடைகளை அணிந்தாலும், பட்டு ஆடைகளை அணியும்போது, கிடைக்கும் மதிப்பும், பெருமிதமும் சற்று அதிகமே. அதனால்தான் இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளில் முதன்மையானதாக பட்டுத் திகழ்கிறது. இதன் காரணமாகவே பல பெண்கள் பட்டு ஆடைகளுக்கு அடிமைகளாகவே இருக்கின்றனர்.

மல்பெரி சாகுபடி

அந்த வகையில் பட்டு உற்பத்திக்கான மல்பெரி சாகுபடி ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பட்டு வளர்ச்சித் துறையின் ஈரோடு உதவி இயக்குனர் சிவநாதன், தாளவாடி உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பெரும் பகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3,000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பாண்டில் ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளனர்.

ரூ.750

தற்போது வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ 650 முதல் 750 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகிறது. சேதமடைந்த சுமாரான பட்டுக்கூடுகள் கூட ஒரு கிலோ 580 ரூபாய்க்கு வாங்கிச் செல்கின்றனர்.

கூடுதல் லாபம்

கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் ‘மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள்’ நியமிக்கப்பட்டுள்ளதால் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்துக்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

உற்பத்தியை அதிகரிக்க

விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52,000 மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படுகிறது.

கருவிகள்

கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவையும் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்படும். இவற்றுக்கு டெண்டர் முடிந்துள்ளதால் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு ரூ.80,000 மானியம் - உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

ஆதாருக்கு 10 ஆண்டுகள்தான்- அச்சச்சோ!

English Summary: Pattu Manufacturing - Tools at Subsidized Prices! Published on: 14 November 2022, 07:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.