பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையாக சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோதி நேற்று விடுவித்துள்ளார். இந்த 2000 ரூபாய் இன்னும் உங்களுக்கு வரவில்லை என்றால், செய்ய வேண்டியது என்ன என்பதை விவசாயிகள் எதரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நேற்று கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாயை மத்திய அரசு விடுவித்தது. இதற்காக 16,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
PM Kisan
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
12ஆவது தவணை
ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், நேற்று 12ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். டெல்லியில் நேற்று பிஎம் கிசான் சம்மன் சம்மேளனம் நிகழ்வு நடைபெற்றது.
11 கோடி விவசாயிகள்
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாயை விடுவித்தார். இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், தகுதியுள்ள விவசாயிகளாக இருப்பினும் சிலருக்கு இன்னும் பிஎம் கிசான் பணம் வந்துசேராமல் இருக்கலாம். அவர்கள் பின்வரும் வழியில் புகார் அளிக்கலாம்.
செய்ய வேண்டியது
-
pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in ஆகிய இமெயில் ஐடிகளுக்கு உங்கள் புகாரை மெயிலாக அனுப்பலாம்.
-
011-24300606, 155261 ஆகிய எண்களை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.
-
1800-115-526 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க...
Share your comments