PM கிசான்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 1, 2022 அன்று பிரதமர் கிசான் யோஜனாவின் 10வது தவணையை இந்தியாவில் உள்ள கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளுக்கு சேலுத்தினார் .
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணம் கிடைத்தாலும் பல விவசாயிகளின் கணக்கில் நிதி வரவில்லை. எனவே, பணம் பெறாத விவசாயிகள், மத்திய விவசாய அமைச்சகத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் புகார் செய்யலாம். மேலும் பல தகவல்களையும் அறிந்திடலாம்.
பல விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் இடம் பெற்றாலும், வருமான வரி செலுத்தும் தகுதியற்ற விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் பயனடையமாட்டார்கள். அதாவது, முன்னாள் அல்லது தற்போது அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயிகள், மேயர் அல்லது மாவட்ட பஞ்சாயத்து தலைவர், எம்எல்ஏ (MLA),எம்எல்சி (MLC), மற்றும் மாநிலங்களவை எம்.பி.
இவர்கள் விவசாயம் செய்தாலும் இந்த திட்டத்தில் பயனடையமாட்டார்கள். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இதில் இடம் பெற முடியாது என்பது குறிப்பிடதக்கது.
PM Kisan பணத்தைப் பெற இந்த எண்களை அழைக்கவும் (Call these numbers to receive PM Kisan cash)
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் தங்கள் கணக்கில் வராத விவசாயிகள் உடனடியாக PM Kisan Helpdesk-ன் உதவியைப் பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரை PM Kisan Helpdeskஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். கீழே நாங்கள் கட்டணமில்லா எண்கள் மற்றும் ஹெல்ப்லைன் எண்களைக் குறிப்பிட்டுள்ளோம்;
PM கிசான் இலவச எண்: 18001155266
PM கிசான் ஹெல்ப்லைன் எண்:155261
PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606, 0120-6025109
விவசாயிகள் - pmkisan-ict@gov.in என்ற முகவரியில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
PM Kisan திட்டத்தின் கீழ் உங்கள் நிலையை அறிய இந்த எண்ணை அழைக்கவும் (Call this number to know your status under PM Kisan scheme)
011-23381092 (நேரடி உதவி எண்) என்ற இந்த எண்ணில் அழைப்பதன் மூலமும் உங்கள் தவணையின் நிலையை அறியலாம். இது தவிர, இத்திட்டத்தின் உழவர் நலப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். அதன் டெல்லி தொலைபேசி எண் 011-23382401 மற்றும் மின்னஞ்சல் ஐடி pmkisan-hqrs@gov.in.
பணம் செலுத்துவதில் தாமதத்திற்கான காரணம் (Reason for delay in payment)
பெரும்பாலும் பணம் முழுமையடையாத அல்லது முறையற்ற ஆவணங்களால் சிக்கிக் கொள்கிறது. பெரும்பாலான மக்கள் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால் - தவறான ஆதார் அட்டை எண், கணக்கு எண் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களில் தவறு செய்வது. நீங்களும் இதைச் செய்திருந்தால், வரும் தவணைகளையும் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே பொது சேவை மையம் (CSC) அல்லது PM Kisan Help Desk (அதிகாரப்பூர்வ இணையதளத்தில்) சென்று இந்த தவறுகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 வீதம் மூன்று மாத இடைவெளியில் மாற்றப்படுவது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்
2 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் உறுதி!
Share your comments