இந்திய நாட்டில் விவசாயிகளுக்கு நன்மை தரும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் 6,000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி தொகையானது ஒவ்வொரு வருடத்துக்கும் 3 தவணைகளாக வழங்கப்படும்.
இ-கேஒய்சி கட்டாயம் (e-KYC must)
இத்திட்டத்தில் இருபவ்ரகள் கட்டாயமான முறையில் இ-கேஒய்சி (e-KYC) செய்து இருக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த இ-கேஒய்சி-யை செய்யாதவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தவுள்ள 2000 ரூ வழங்கப்பட மாட்டாது என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கப்படும் நிதி தொகை தங்களது வங்கி கணக்கில் வருமா? இல்லையா? என்று சரிபார்க்க கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சரிபார்க்கும் வழிமுறை (Checking Method)
- முதலில் https://pmkisan.gov.in என்ற PM Kisan Yojana-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன்பின் அதில் விவசாயிகள் கார்னர் (Farmer’s Corner section) என்பதில் பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- தற்போது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இறுதியாக பயனாளிகளின் முழுமையான பட்டியல் திரையில் தோன்றும். அதில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்
அதேபோன்று பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கும் தவணை நிலைகளை தொடர்பாக அறிந்துகொள்ள கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- முதலில் PM Kisanயின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் வலது புறத்தில் உள்ள விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்து அதில் பயனாளி நிலை (Beneficiary status) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொது புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தங்களின் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- இறுதியாக தங்களின் தவணை நிலை பற்றிய முழுமையான தகவலை பெற முடியும்.
விவசாயிகள் அனைவரும் மிக விரைவாக e-KYC யை பூர்த்தி செய்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்தால் மட்டுமே அடுத்த தவணை நிதி கிடைக்கும் என்பதால், விவசாயிகள் உடனே e-kyc யை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க
மஞ்சளில் அதிக மகசூல் பெற குழித்தட்டு நாற்றாங்கால் உற்பத்தி
வேளாண் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது விவசாய முகத்தையே மாற்றும்: ஆய்வறிக்கையில் தகவல்!
Share your comments