PM Kisan FPO யோஜனா:
விவசாயிகளுக்கு நிதி உதவி செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. விவசாயிகளுக்காக மத்திய அரசு மீண்டும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, புதிய விவசாய மசோதாவை கொண்டு வர அரசு தயாராகி வருகிறது. இதற்கிடையில், அரசாங்கம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய சலுகையை வழங்கப் போகிறது. மேலும் இதன் கீழ் அரசு 15 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
15 லட்சம் பெறுவது எப்படி
அரசாங்கம் PM Kisan FPO திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு புதிய விவசாய தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, 11 விவசாயிகள் ஒன்றாக ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தை உருவாக்க வேண்டும். இது விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் அல்லது உரங்கள், விதைகள் அல்லது மருந்துகளை வாங்குவதை எளிதாக்கும்.
திட்டத்தின் நோக்கம்
விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிடைக்கும் வகையில் இதுபோன்ற திட்டத்தை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் எந்த தரகர்களிடமோ செல்ல வேண்டியதில்லை. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளில் தவணையாக வழங்கப்படும். இதற்காக, 2024 ஆம் ஆண்டுக்குள், 6885 கோடி ரூபாய் அரசாங்கத்தால் செலவிடப்படும்.
இப்படி விண்ணப்பிக்கவும்
PM கிசான் FPO திட்டத்தின் பயனைப் பெற, விவசாயிகள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். உண்மையில் அரசாங்கம் இதுவரை பதிவு செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை. பதிவு செயல்முறை தொடங்கியவுடன், நீங்கள் விண்ணப்பிக்கலாம். அரசாங்கத்தின்படி, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும் படிக்க...
பிஎம் கிசான் ஆப்: ரூ. 4,000 பெற செப்டம்பர் 30 க்கு முன் விண்ணப்பிக்கவும்!
Share your comments