1. விவசாய தகவல்கள்

PM Kisan: GOI மொபைல் செயலி பதிவு செய்து! ரூ.6000 பெறுங்கள்!

Aruljothe Alagar
Aruljothe Alagar

PM Kisan: GOI Mobile Processor Register! Get Rs.6000!

PM கிசான் சம்மன் நிதி யோஜனா செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான் சம்மன் நிதி யோஜனா) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இதுவரை ரூ .1 லட்சத்து 60 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா தொற்றின் போது சிறு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலத்தில் இதுவரை 2 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது.

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் ஒன்பதாவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 9 ஆகஸ்ட் 2021 இல், ரூ. 19,500 கோடி 9.75 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் 2000 ரூபாய் மூன்று தவணைகள் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அவர்கள் PM கிசானின் ஆன்லைன் போர்டல் www.pmkisan.gov.in மூலமாகவோ அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ பார்க்கலாம். அதன் நோக்கத்தை விரிவுபடுத்த, மொபைல் செயலியை என்ஐசி (தேசிய தகவல் மையம்) உருவாக்கி வடிவமைத்துள்ளது.

நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்

இதற்காக, அருகில் உள்ள தபால் நிலையத்தின் சிஎஸ்சி கவுண்டரில் பதிவு செய்யலாம். பிரதமர் கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு விவசாயிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம். அதே நேரத்தில், PM கிசான் இந்த திட்டத்தை GOI மொபைல் ஆப் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு, முதலில் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  அதன் படி மிகவும் எளிதானது மற்றும் இந்த செயலி உள்ளூர் மொழியிலும் இருக்கிறது.

முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் மொபைலில் PM Kisan GoI Mobile App (PMKISAN GoI Mobile App) ஐ பதிவிறக்கவும்.

புதிய விவசாயி பதிவில் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும். அதன் பிறகு தொடரவும் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இப்போது பெயர், முகவரி, வங்கி கணக்கு விவரங்கள், ஐஎஃப்எஸ்சி குறியீடு போன்றவற்றை பதிவு படிவத்தில் சரியாக உள்ளிடவும்.

அதே நேரத்தில், காஸ்ரா எண், கணக்கு எண் போன்ற நிலத்தின் விவரங்களை உள்ளிட்டு அனைத்து தகவல்களையும் சேமிக்கவும்.

சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்யவும். இதன் மூலம், PM கிசான் மொபைல் பயன்பாட்டில் உங்கள் பதிவு நிறைவடையும்.

மறுபுறம், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு PM கிசான் உதவி எண் 155261/011-24300606 ஐப் பயன்படுத்தலாம்.

மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் கூடுதல் நன்மைகள் பெறலாம்.

பதிவு செய்வது எளிது. இதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் பதிவு மற்றும் பணம் செலுத்திய நிலையை அறியலாம். பெயர் திருத்தத்தை ஆதார் எண்ணின் கீழ் செய்யலாம். நீங்கள் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள ஹெல்ப்லைன் எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

PM-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!

English Summary: PM Kisan: GOI Mobile Processor Register! Get Rs.6000!

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.