மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்தத் தேதியில், 11வது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதுதொடர்பானத் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக விவசாயிகள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.
PM kisan
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
10-வது தவணை
இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட் உள்ளது.
பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 11வது தவணைக்காக நாடு முழுவதும் உள்ள 12.50 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர். 11வது தவணையை பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
11வது தவணை தேதி
உண்மையில் PM- kisan பணம் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையான தவணைக்கு வர உள்ளது. விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 11வது தவணையை மாற்றும் தேதி குறித்து கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 3 சம தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கிசான் சம்மன் நிதியின் 11வது தவணையை மே 31 ஆம் தேதி பிரதமர் மீண்டும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இறுதியாக 2021ம் ஆண்டு மே 15ம் தேதி 2000 ரூபாய் அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மே 15ம் தேதி தாண்டி விட்டதால் விவசாயிகள் 11வது தவணையினை விரைவாக வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
e-KYC
இந்த முறை 11 வது தவணையைப் பயன்படுத்த, e-KYC செய்ய வேண்டியது அவசியம். 12.5 கோடியில் 80 சதவீத விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே விவசாயிகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் e-KYC செய்யலாம். மேலும் வீட்டில் இருந்தபடியே PM Kisan-ன் இணையதளத்தைப் பயன்படுத்தி e-KYC செயல்முறையை செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
உலகில் கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் இதுதான்!
TNPSC Exam- அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது!
Share your comments