பிஎம் கிசான் திட்டத்துக்கான கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க ஜூலை 31ம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான்
விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலும், நிதிச்சுமையை அவர்கள் எதிர்கொள்ள உதவும் விதமாகவும் மத்திய அரசு பலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் PM-kisan திட்டம்.
ரூ.6000 நிதி
மத்திய அரசு சார்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒரு ஆண்டில் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்துக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
11ஆவது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11ஆவது தவணைப் பணம் கடந்த மே 31ஆம் தேதி பிரதமர் மோடி கையால் விடுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்த விவசாயிகள் நிறையப் பேரின் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டது.
பணம் வரவில்லை
பிஎம் கிசான் திட்டத்தில் நிறையப் பேருக்கு பணம் வந்துசேருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பயனாளியின் பெயர், வங்கிக் கணக்கு விவரம், ஆதார், மொபைல் நம்பர் போன்ற தகவல்களைத் தவறாக வழங்கியிருந்தால் நிதியுதவி கிடைக்காது. 11ஆவது தவணைப் பணம் உங்களுக்கு வருமா, இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்களே உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்தத்திட்டத்திற்கான வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்.
கேஒய்சி
விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம். விவசாயிகளின் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் சரிபார்ப்பு சார்ந்த விதிமுறைதான் இது. இதை முடிக்காவிட்டால் விவசாயிகளுக்கு நிதியுதவி வராது. மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு இந்த வேலையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.
காலக்கெடு
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் தற்போது முடிந்துவிட்ட நிலையில், அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 31ஆம் தேதி வரை தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்த ரேஷன் கார்டுக்கு இனி பொருட்கள் கிடையாது- அரசு முடிவு!
இதய ஆரோக்கியத்திற்கு இதைச் செய்தால் போதும்- சிம்பிள் பயிற்சி!
Share your comments