விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடி பணப் பரிமாற்ற திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பலன் பெற தகுயற்றவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 9 வது தவணையை, ஆகஸ்ட் 9 அன்று பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காக அறிவித்தார். ரூ. 19,500 கோடிக்கு மேலான தொகை 9.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் ரூ .6000 தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெறலாம். இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை 9 வது தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் குறித்து நிறைய குழப்பங்கள் நிகழ்கின்றன.
பிரதமர் கிசான் திட்டத்தின் பயன்கள் யாருக்கு கிடைக்காது?
துரதிருஷ்டவசமாக, கணவன் மனைவி இருவரும் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் நன்மைகளை அனுபவிக்க இயலாது. இந்தத் திட்டத்தில் பயனடையும் ஒரு கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தால், அவர்களை அரசாங்கம் ஒப்புக்கொள்வது இல்லை.
விவசாயிகளின் குடும்பத்தில் யாராவது வரி செலுத்தி வந்தால், இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.
அதேபோல், ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற வேலைகளுக்காக அல்லது மற்றவர்களின் வயல்களில் விவசாயம் செய்து வந்தால், அவர்கள் திட்டத்தின் பயனை அனுபவிக்க தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மறுபுறம், ஒரு விவசாயி விவசாயம் செய்கிறார், ஆனால் வயல் அவரது பெயரில் இல்லை ஆனால் அவரது தந்தை அல்லது தாத்தாவின் பெயரில் இருந்தால், அவர்கள் இந்தத் திட்டத்தின் பலனை பெற மாட்டார்கள்.
அடுத்ததாக, விவசாய நிலத்தின் உரிமையாளர் ஒரு அரசு ஊழியராகவோ அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியராகவோ, அல்லது தற்போதைய அல்லது முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் ஆக இருந்தால் இந்த திட்டத்தில் பயன் பெற மாட்டார்கள்.
தொழில்முறை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் PM கிசான் சம்மன் நிதி யோஜனா சலுகைகளை பெற தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மேலும் படிக்க:
PM Kisan: இந்த நாளில் விவசாயிகளின் கணக்கில் 2,000 ரூபாய் வரும்,
PM-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!
Share your comments