விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் 14 ஆவது தவணை முறையானது எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
விவசாயிகளுக்கு 2000 ரூபாய்
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு மத்திய துறை திட்டமாகும். இந்த திட்டத்தின் படி, தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு, ₹ 6,000 மூன்று தவணைகளில் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதன் மூலம் சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 87,217.50 கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது. இந்த திடத்தின் படி, 13வது தவணையை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் அரசு செலுத்தியது.
14ஆவது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 11வது தவணை 2022 மே 31ஆம் தேதியில் மாற்றப்பட்டது.
அதன்படி, 14ஆவது தவணை மே 15ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் தவணை பணத்தை மத்திய அரசு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க
மகளிருக்கான ரூ.1,000 கூட்டுறவு வங்கிகளில் வழங்கல்: அமைச்சர் முக்கிய தகவல்!
சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு இது முக்கியம்: பிர்லா வழங்கிய அறிவுரை!
Share your comments