மத்திய பட்ஜெட் மற்றும் இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு வேகமாக வளரும் என்பதைப் பற்றி காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அதில் கடந்த ஏழு வருடங்களாக கிராமப்புறங்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டார்.
அதில், இந்த ஆண்டு பட்ஜெட், கிராமப்புற வளர்ச்சிக்கும், கிராமங்களில் முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது, எனவும்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பதையும் அவர் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு செவ்வானே நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து கிராமங்களுக்கும் கழிவறை, மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார், பிரதமர். மக்களின் குடிநீர் தேவையை மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கிராமங்களுக்கு டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல, அவை கிராமங்களுக்கும் தேவை என்பது மிக முக்கியம் என்றும், இவற்றின் மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளரும் கிராமங்களுக்கு, வீடுகள் மற்றும் அதன் நிலங்களின் சரியான எல்லை நிர்ணயிப்பது அவசியமாகும். சுவாமித்வா யோஜனா இதை எளிதாக்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 40 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
காற்று வெளியிடை படத்தின் பிரபல மலையாள நடிகை காலமானார்
குடியரசு தின தமிழக அலங்கார ஊர்திகள் குறித்து புதிய அறிவிப்பு!
Share your comments