நாடு முழுவதும், Pradhan Mantri Kisan Sampada Yojana திட்டத்தின் கீழ் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் தகவல் (Union Minister Information)
இதுதொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராமேஸவர் டெலி கூறியதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன், உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு, PMKSY திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5,30,500 வேலைவாய்ப்புகள் (5,30,500 jobs)
இந்தத்திட்டத்தில் தற்போது, நாடு முழுவதும் உள்ளவர்கள் பயனடையும் வகையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 500 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிறப்பு அம்சங்கள் (Special Features)
PMKSY திட்டத்தின் சிறப்பு அம்சம் என எடுத்துகொண்டால், அதில், மெகா உணவுப் பூங்கா அமைத்தல், குளிரூட்டும் வசதி கொண்ட சேமிப்புக் கிடங்கு மற்றும் மதிப்புக்கூட்டுப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்தக் கட்டமைப்பை உருவாக்கித்தருதல், ஒருங்கிணைந்த Agro-Processing Clusters அமைப்பதற்கான உட்கட்டமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியவை.
இவை தவிர உணவுப் பதப்படுத்துவதற்கான வசதிகளை விரிவாக்கம் செய்து தருதல், சேமிப்பு கிடங்கு வசதியை அமைத்துத்தருதல், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மனித வளம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்த போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பெயர் மாற்றம் (name change)
SAMPADA என்ற பெயரில் 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் பின்னர் PMKSY திட்டமாகப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!
Share your comments