விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் 200 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
உளுந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் நிறுவனத்தின் மூலம் உளுந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 200 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
-
விலை ஆதார திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்தில், இதர பொருள்கள் 2 சதவீதத்திற்கு மிகாமலும், இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதத்திற்கு மிகாமலும், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
-
சேதமடைந்த பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், முதிர்வடைந்த மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 சதவீதத்திற்கு மிகாமலும், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 12 சதவீதத்திற்கு மிகாமலும் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான சராசரி தரங்களுடன் (FAQ) விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கிலோவுக்கு ரூ.60.00 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
-
உளுந்திற்கான கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
-
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 16-11-2020 வரை உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.
-
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் உளுந்து விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 9003753160, 04562 – 245038 என்ற எண்ணிற்கும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 9626755153, 04566 – 220225 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!
Share your comments