விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படும் என, கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
காரீஃப் பருவ அறுவடை (Cariff season harvest)
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், காரீஃப் பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் துவரை விளைபொருள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
பயிரின் தரம் (Quality of Crop)
இதில், துவரை பயிரானது இதர தானியங்களின் கலப்பு இல்லாமலும், சேதம் அடையாமலும், முதிர்வடையாத சுருங்கிய நிலையில் இல்லாமலும், வண்டுகள் தாக்காமலும், ஈரப்பதம், 12 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
விலை (Price)
குறைந்தபட்ச ஆதார விலை ரூ.6,000 (குவின்டாலுக்கு) என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்.
வங்கிக்கணக்கில் வரவு (Bank Account)
விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
விவசாயிகளின் சிட்டா அடங்கலில் துவரை சாகுபடி பரப்பளவு இடம் பெற்றிருக்க வேண்டும்.
-
வங்கி கணக்கு புத்தகம்,
-
ஆதார் அட்டை நகல்
கூடுதல் விபரங்களுக்கு
மேற்பார்வையாளர்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பாப்பாக்காபட்டி (அஞ்சல்)
அய்யர்மலை
இரும்பூதிப்பட்டி
கரூர்
என்ற முகவரியிலும்
8838793539
என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இதேபோல்
சீனிவாசன் தோட்டம்
கீழபஞ்சம்பட்டி
பெட்ரோல் பங்க் அருகில்
கிருஷ்ணராயபுரம்
என்ற முகவரியிலும்,
999315486 என்ற
செல்போன் எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!
ரிசர்வ் வங்கி ஊழியராக விருப்பமா? கல்வித்தகுதி 10ம் வகுப்பு- உடனே விண்ணப்பியுங்கள்!
Share your comments