அக்டோபர் முதல் டிசம்பர் வரை வயல்களின் எலிகளின் தொல்லை அதிகளவில் இருக்கும் என்பதால், எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தாவது:
-
எலிகளால் நெல் வயல்களில் சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பும் ஏற்படுகிறது.
-
இதுதவிர, எலிகளின் சிறுநீர், அதன் புழுக்கை, ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
-
நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும். இதன் தாக்குதல் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும்.
-
எலிகளை கட்டுப்படுத்த (Rat Control)
-
எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம்.
ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப் படுத்தலாம்.
-
5கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீதம் ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும்.
-
மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி கவர்ச்சி உணவு அரிசி, பொரி, கருவாடு, கடலையுடன் சேர்த்து உருண்டை யாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும்.
-
ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன் 3 அல்லது 4 நாட்கள் வெறும் உணவாக அல்லது விசம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும்.
-
வீட்டு உபயோகத்துக்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.
-
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments