வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
கோயிலுக்குள் மழைநீர்
திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
ரெட் அலேர்ட் (Red Alert)
இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை ஆகிய 6 மாவட்டங்களிலும் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
விடுமுறை
கனமழை காரணமாக, 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
மயிலாடுதுறை
-
தேனி
-
திண்டுக்கல்
-
விருதுநகர்
-
தென்காசி
-
திருநெல்வேலி
-
தூத்துக்குடி
-
தஞ்சாவூர்
-
அரியலூர்
-
பெரம்பலூர்
-
நாகை
-
புதுக்கோட்டை
-
கடலூர்
-
கன்னியாகுமரி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
-
மதுரை
-
சிவகங்கை
-
ராமநாதபுரம்
-
திருச்சி
-
திருவாரூர்
-
கள்ளக்குறிச்சி
-
விழுப்புரம்
28ம் தேதி வரை (Until the 28th)
குறிப்பாக 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Share your comments