மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் தொகை வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்பது குறித்து புதுவை யூனியன் பிரதேச அரசு ஆலோசித்து வருகிறது.
பயிர்கள் சேதம்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் திடீர் கனமழை பெய்தது. இதனால் பல ஏக்கர் பரப்பிலான நிலங்களில் வெள்ளம் புகுந்து, நெல் உள்ளிட்டப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து, புதுச்சேரி புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுவையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினாலும் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் குருவிநத்தம், இருளஞ்சந்தை, சித்தேரி வாய்க்கால் வழியாக தண்ணீர் நிலத்தில் புகுந்தன.
நீரில் மூழ்கி நாசம்
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் தொண்டை கதிர் உள்ள நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.குறிப்பாக இருளஞ்சந்தை, சோரியாங்குப்பம், குருவிநத்தம், பாகூர் போன்ற பகுதியில் உள்ள நெற்பயிர்கள் சுமார் 400 ஏக்கருக்கு மேல் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஏற்குமா?
பாதிக்கப்பட்ட நிலங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.எனவே வேளாண்துறை இயக்குனர், அதிகாரிகள் கொண்ட குழுவினர், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments