வாரணாசியிலிருந்து வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு முதன்முறையாக அரசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரிசி விளைச்சல் அதிகளவு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அரிசி ஏற்றுமதிக்கு வாரணாசியில் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாலும், அதற்கான பணிகளை , வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா (Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) மேற்கொண்டது.
முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு தளத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சியின் பயனாக நேற்று வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன் அரிசி கத்தாருக்குக் அனுப்பிவைக்கப்பட்டது.
அரிசி ஏற்றிச்சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் எம்.அங்கமுத்து வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எம். அங்கமுத்து, வாரணாசியிலிருந்து அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபெடா தயாரிக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!
பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை உருவாக்க வேண்டும்!
Share your comments