இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 கிராமங்களில் உள்ள 77 ஊராட்சிகளைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாற அரசு மானியம் வழங்கப்பட உள்ளதால், அதனைப் பெற்றுப் பயனடைய முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி (Government assistance)
மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஆகியவை தொழில்படிப்புகளாகக் (Proffessional Courses) கருதப்படுகின்றன. அவற்றில் வேளாண்மையை விரும்பிப் படிப்போர், விவசாயம் சார்ந்த பலத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குக் கற்பிப்பதுடன், தொழில் முனைவோராக மாறவும் அரசு பல்வேறு உதவி செய்து வருகிறது.
7 கிராமங்கள் தேர்வு (7 villages selected)
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு தாலுக்காவிற்கு 7 கிராமங்கள் வீதம் மொத்தம் 77 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் வேளாண் பட்டதாரிகள் அரசு மானியத்துடன் தொழில் தொடங்கி, விவசாயிகளுக்கு உதவ விண்ணப்பிக்கலாம். இதில் காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம், காய்கறிகள், பழங்களைக் கொள்முதல் செய்தல், மண், தண்ணீர் பரிசோதனை மையம் ஆகியவற்றை துவங்கலாம்.
தேர்வு எப்படி? (How to choose?)
மாவட்ட ஆட்சியர் கொண்ட தேர்வுக்குழு மூலம் தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி (Qualification)
-
18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல்துறை பட்டப்படிப்பு முடித்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலையில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
-
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
ரூ.2 லட்சம் வரை மதிப்பு கொண்ட விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
மானியம் எவ்வளவு? (How much is the subsidy?
-
இதில், ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
-
கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள, உங்கள் அருகில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
-
வேளாண் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்
2 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் உறுதி!
Share your comments