விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என இந்த மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன்,மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், வழங்கப்படும் 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ரூ.13 கோடி கடன்
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது, புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு.
ரூ.1000
மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும். மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும்.
உயர்த்தப்படும் உதவித்தொகை
70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
மேலும் படிக்க...
Share your comments