டெல்டா மாவட்டங்களில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க ஏதுவாக, 23 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, டெல்டா மாவட்டங்களில், நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட, வேளாண் பயிர்கள் மட்டுமே, அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.இதனால், விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் கிடைப்பதில்லை. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதால், நாள்தோறும் வருவாய் ஈட்ட முடியும். அதிக வருமானமும் கிடைக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு, டெல்டா மாவட்டங்களில், உயர் தொழிற்நுட்பத்தில் தோட்டக்கலை பயிர்களை, சாகுபடி செய்யும் திட்டத்தை செயல்படுத்த, தோட்டக்கலை துறை முடிவெடுத்து உள்ளது. இதற்கு, 23 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் (IHDS), தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (National Agriculture Development Scheme) ஆகியவற்றின் கீழ், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மானியம்
இந்த நிதியில், பசுமை குடில்கள், நிழல்வலை குடில், பசுமை போர்வை, உள்ளிட்டவை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப நிலையில், இவற்றில், ஆண்டு முழுவதும் காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து, அதிக லாபம் பெற முடியும்.
சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சவ்சவ் உள்ளிட்டவற்றை, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பந்தல்கள் அமைக்கவும், மானியம் வழங்கப்பட உள்ளது. தென்னை உள்ளிட்ட மரங்களுடன் ஊடு பயிராகவும், காய்கறிகள் சாகுபடி செய்ய, மானியம் வழங்கப் பட உள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வை விரைந்து முடிக்க, டெல்டா மாவட்ட அதிகாரிகளுக்கு, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments