விவசாயிகள் போராட்டத்தால், 5000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக, அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொடரும் போராட்டம் (Protest to continue)
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.
பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளே பெரும்பாலானோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை தோல்வி(Negotiation failed)
இதன் காரணமாக பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநில பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து 8ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டது. 11 மாநிங்களில் நடத்தப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அமோக ஆதரவு அளித்தன.
விவசாயிகளின் இந்த போராட்டத்தால், தினமும் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வெளிநாடுகளுக்கு உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாமல் போகிறது. இதனால், நம் தொழில்துறையின் மீதான நற்பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
ரூ.5000 கோடி இழப்பு
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான (Advertisement Confederation of All India Traders (CAIT) )பும், கடந்த, 20 நாட்களில் போராட்டம் காரணமாக, டில்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், டில்லிக்கு செல்லும் பொருட்களில், 30 - 40 சதவீத பொருட்கள் போய் சேரமுடியாமல், பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகள் போராட்டம் காரணமாக பி.எம் கிசான் 7-வது தவணை விடுவிப்பில் தாமதம்?
வெற்றிலை சாகுபடிக்கு 3 நாள் இலவச பயிற்சி- விண்ணப்பிக்க முந்துங்கள்!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments