கனமழையால் பாதிக்கப்பட்டுள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்று கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி கூறியதாவது:
நிரம்பும் ஏரிகள்
புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 84 ஏரிகளில் 54 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளது.
கனமழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அரசு உணர்ந்திருக்கிறது.
விவசாயிகளுக்கு நிவாரணம்
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள், 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு, சேதமடைந்த 25 வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.
ரூ.5,000 நிவாரணம்
மேலும், இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு கேட்கப்படும்.
கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு 10 ஆயிரமும், ஆடுகளுக்கு 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.
செப்பனிடும் பணி (The task of shepherding)
கனமழையால் சேதமடைந்தச் சாலைகளைச் செப்பனிட ரூபாய் 100 கோடிக்கு மேல் டென்டர் விடப்பட்டுள்ளது. மழை காலம் முடிந்த பின் சாலைகள் முழுவதுமாக செப்பனிடும் பணி தொடங்கும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments