திருப்பூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 22.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளைநிலத்தில் சேகரமாகும் மழைநீரை வீணாக்காமல், நிலத்துக்குள் செறிவூட்டும் விவசாயிகளை ஊக்குவிக்க , வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தேசிய வேலை உறுதி திட்டத்தில், மண் வரப்பு அமைக்கும் பணிக்கும், தென்னை மரத்துக்கு பாத்தி அமைக்கும் பணிக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் வேளாண்துறை மற்றும் தோட்டகலை துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.22.50 லட்சம் ஒதுக்கீடு (Fund Allocated)
திருப்பூர் மாவட்டத்துக்கு, 30 பண்ணைக்குட்டை அமைக்க, 22.50 லட்சம் ரூபாய், தோட்டக்கலை துறை ஒதுக்கியுள்ளது. பண்ணை குட்டை அமைப்பதற்கு ஆகும் 1.50 லட்சம் ரூபாய் செலவில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'தாராபுரம், காங்கயம், மூலனுார், வெள்ளகோவில் ஒன்றியங்களுக்கு மூன்று, பிற ஒன்றியங்களுக்கு இரண்டு, பண்ணைக்குட்டை ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், 30 மீ., நீள, அகலத்தில், 3 மீ., ஆழத்தில், பண்ணைக்குட்டை அமைக்கலாம். பாலிதீன் உதவியுடன், தண்ணீர் சேகரிக்கும் வகையில், குட்டை வடிவமைக்கப்படும். தேங்கும் நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி பயிர்களுக்கு பாய்ச்சலாம், என்றனர்.
மேலும் படிக்க....
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments