சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2023-யை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அவை அறிவித்துள்ளது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் இந்நடவடிக்கை, சிறுதானி சாகுபடியாளர்களுக்கு பெரும் சந்தை வாய்ப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நலத்திட்டங்கள்
இதனைக் கருத்தில்கொண்டு, சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிம், மத்திய அரசு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், கர்நாடக மாநில அரசு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.10,000
அது என்னவென்றால், சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் என்பதாகும். இந்தத்திட்டத்தின் பெயர் ரைதாசிரி ('Raithasiri') என்பதாகும்.
தோட்டக்கலைப் பயிர்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்வோரை ஊக்குவிப்பதுடன், அம்மாநில விவசாயிகளை அதிகளவில் இயற்கை விவசாயத்தின் பக்கம் திசைதிருப்பும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தை
இதனிடையே விவசாயிகளின் வசதிக்காக அதி நவீன வசதி கொண்ட மிகப்பெரிய பட்டுபுழு சந்தையை சித்லகட்டாவில் அமைக்கவும் மாநில பட்ஜெட்டில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு 75 கோடி ரூபாய் செலவில் திறக்கப்படும் இந்த சந்தை, ஆசியாவிலேயே 2-வது பெரிய சந்தையாக இருக்கும்.
ரூ.100 கோடி
இதேபோல் மலர் விவசாயிகளுக்காக அதி நவீன வசதியுடன் கூடிய சர்வதேச மலர் சந்தையையும், கால்நடை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக, 100 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய பால் பண்ணையை அமைக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க…
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,000- முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்த தேதியில்தான் பிஎம்-கிசான் 13-வது தவணை- விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
Share your comments