ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit: You Tube

தோட்டக்கலைப்பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழகஅரசின் சிறந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில், தோட்டக்கலை பயிற்சி முக்கியப்பங்கு வகிக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழவகைளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது

அரசு முயற்சி

எனவே வழக்கமான பயிற்சிகளைப் பெற்று நல்ல லாபம் ஈட்டும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாறி, விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Government of Tamil Nadu Horticulture Scheme

முதல்வர் அறிவிப்பு

மனிதன் ஆரோக்கியமாக வாழ, தினமும் குறைந்த பட்சம் 100 கிராம் பழங்கள் மற்றும் 300 கிராம் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையும் உயர்த்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு விதி எண் 110ன் கீழ் இந்தத் திட்டத்தை சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு காய்கறிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கியத் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்குத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

அதாவது ஆண்டுதோறும் அனைத்து முக்கியக் காய்கறிகளும், நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Credit:Dirt -tp-Dinner

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஊக்கத்தொகையைப் பெற வழக்கமாக சாகுபடி செய்யும் பருவம் தவிர்த்து, பற்றாக்குறை ஏற்படும் பருவங்களில் அறுவடைக்கு வரும் வகையில் காய்கறி மற்றும் பழங்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை

  • நடவுச்செடிகளின் விலைப்பட்டியல்

  • கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல்

  • மின் அடங்கலின் நகல் மற்றும் சாகுபடி மேற்கொண்ட வயலில் எடுக்கப்பட்டப் புகைப்படம்

    ஆகிய விபரங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதாவது 2 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்திருக்கும் விவசாயி 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையைப் பெறலாம்.
தோட்டக்கலைத்துறையின் பிறத் திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தோட்டக்கலைத்துறையின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உழவன் செயலியின் மூலம் விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மானிய உதவி பெறுவதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விபரங்களைப் பெற தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை விவசாயிகள் அணுகிப் பயன்பெறலாம்.

மேலும் படிக்க...

உங்கள் பயிருக்கு பாதுகாப்பு அரண் எது தெரியுமா?- விபரம் உள்ளே!

நண்பேன்டா! உழவனின் நல்ல நண்பனான மண்புழுவை, நண்பர்கள் தினத்தில் போற்றுவோம்!

English Summary: Rs.2,500 per hectare Government of Tamil Nadu Horticulture Scheme

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.