நெல், கரும்பு விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
உற்பத்தி மானியம்
புதுச்சேரியில் நெல், கரும்பு விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.20,000
இது குறித்து, புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தி மானியம் கடந்த ஆண்டு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தபடி ஏற்கனவே நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கில் வரவு
தற்போது கரும்பு மற்றும் பப்பாளி சாகுபடி செய்த 871 விவசாயிகளுக்கு ரூ.93 லட்சத்து 24 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆண்டு நவரை நெல் சாகுபடி செய்த அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
நெல் விவசாயிகள் அதன்படி சொர்ணாவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யாமல் இந்த ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 200 புதுச்சேரி அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.15 லட்சத்து 49 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் இப்போது செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments