1. விவசாய தகவல்கள்

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,000- முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs.3,000 per hectare for farmers - Chief Minister M.K.Stal's announcement!

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. இதனைக் கருத்தில்கொண்டு, நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு  3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாதிப்பு

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை டெல்டா மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்தார்.

 

அமைச்சர்கள் ஆய்வு

இவர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதங்களை பார்வையிட்டனர். ஒவ்வொரு மாவட்டங்களாக சென்ற இவர்கள் விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் விவரங்களை கேட்டு அறிந்தனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் சேத மதிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிாரிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

இழப்பீடு அறிவிப்பு

அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி,

  • கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவீதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

  • நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

  • நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Rs.3,000 per hectare for farmers - Chief Minister M.K.Stal's announcement! Published on: 06 February 2023, 10:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.