மத்திய அரசு வழங்கும் 6,000ரூபாயைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த இணைப்பைச் செய்யாதவர்களுக்கு அந்த நிதியுதவி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும், தலா 6,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
வங்கிக்கணக்கில்
இந்த தொகை 3 தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த தொகை,விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தகுதிபெற்ற விவசாயிகள், இதற்கென நிர்வகிக்கப்படும் இணையதளத்தில், தங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டியது கட்டாயம்.
13-வது தவணைக்காக
குறிப்பாக, அந்த முன்பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் இதுவரை, 12 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
சிக்கல்
இந்நிலையில், ஆதார் எண்ணை இதுவரை இணைக்காத 9 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு
விவசாயிகள் தங்ளது ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Toll Free Number: 18001155266
Helpline Number:155261
new helpline: 011-24300606, 0120-6025109
011-23381092 (Direct Help Line).
மேலும் படிக்க...
ஆதார் அட்டைதாரர்களுக்கு ரூ.4.78 லட்சம்- விபரம் உள்ளே!
ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!
Share your comments