1. விவசாய தகவல்கள்

சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

KJ Staff
KJ Staff
Pest Control
Credit : Dinamalar

விளைநிலங்களில், பூச்சிகள் பயிர்களைத் தாக்குவதால் மகசூல் குறைகிறது. இதனால், விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மகசூலை (Yield) குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், பூச்சிக்கொல்லிகளால் சுற்றுச்சூழல் (Enviroent) பாதிக்கப்படுவதோடு, மண்ணின் வளமும் கெடுகிறது. இதனைத் தடுக்க விஞ்ஞானிகளின் உழைப்பில் புதியதாய் அறிமுகமாகவுள்ளது கிராப்கோட்.

கிராப்கோட்:

பயிர்களுக்கு பூச்சிகளால் எந்த அளவுக்கு கெடுதல் விளையுமோ, அந்த அளவுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு நேரிடும். பயிர்களின் விளைச்சலை நாடி வரும் பூச்சிகளை விரட்ட, கொடிய மருந்துகளுக்கு பதில், தானியங்கள், காய், கனிகளை பூச்சிகள் உணர விடாதபடி செய்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்கிறது இந்த "கிராப்கோட்". அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த, 'கிராப் என்ஹான்ஸ்மென்ட் (Crop Enhancement)' என்ற அமைப்பு உருவாக்கியது தான் கிராப்கோட். இது ஒரு பூச்சிக்கொல்லி அல்ல. மாறாக, தானியங்களின் மேல் பூச்சு போல படிந்து காக்கும் கவசம். கிராப்கோட் பூசப்பட்ட தானியங்களை பூச்சிகளால் உணர முடியாது. சில தாவரங்களின் சாறுகள், சில ரகசிய வேதிப்பொருட்களின் கலவையான கிராப்கோட், மனிதர்கள், விலங்குகளுக்கு கெடுதல் செய்யாதது என கிராப் என்ஹான்ஸ்மென்டின் விஞ்ஞானிகள் (Scientists) தெரிவிக்கின்றனர்.

பயன்படுத்தும் முறை:

கிராப்கோட் மருந்துப் பொடியை தண்ணீரில் கலந்து, தெளிப்பான் மூலம் பயிர்களின் மீது தெளித்துவிட வேண்டும். தண்ணீர் உலர்ந்ததும், தானியங்கள், காய்கறிகள் மீதும், இலைகள் மீதும் கிராப்கோட் மருந்து ஒரு படலம் போல பூசிக்கொள்ளும். இதனால், பூச்சிகள், தங்கள் உணவையும், இனப்பெருக்கம் (Reproduction) செய்ய ஏற்ற இலை தழைகளையும் அடையாளம் காண முடியாமல், வேறு பக்கம் சென்று விடுகின்றன.

6 வாரம் வரை பாதுகாப்பு

மழை பெய்து கரையாவிட்டால், கிராப்கோட் மருந்து, ஆறு வாரம் வரை பயிர்களுக்கு பாதுகாப்பு தருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை, மூன்று ஆண்டுகளாக பரிசோதிக்கப்பட்டு, கிராப்கோட் வெற்றிக் கோட்டினை தொட்டுள்ளது; விரைவில் இது சந்தைக்கு வரும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்!

வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!

English Summary: Scientists' new invention to protect the environment and repel pests in crops! Published on: 28 January 2021, 05:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.