சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. நம் முன்னோர்களின் ஆரோக்கியமான உணவில் முதலிடம் சிறுதானியங்களுக்கு தான். இவை நமது பாரம்பரிய உணவாக 25 சதவீதம் புரதம், அதிக நார்ச்சத்தும், இரும்பு, கால்சியம், விட்டமின்கள் அதிகமாக உள்ளது. கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு அனைத்தும் அதிக ஆற்றலை தரக்கூடிய சிறுதானியங்கள்.
கம்பு பயிர் (Rye Crops)
கம்பு பயிருக்கு வேளாண் பல்கலை வெளியிட்ட கோ 7, கோ (சியு) 9, கோ 9, ஐ.சி.எம்.பி.221 ரகங்கள் 80 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். இதற்கு 310 மி.மீ. தண்ணீர் தேவைப்படும்.
கோடையில் கம்பு விதைத்தால் நல்ல அறுவடை கிடைக்கும். வறட்சியை தாங்கி வளரும் வகையில் கம்பு விதைகளை கடினப்படுத்திய பின் விதைக்க வேண்டும். பத்து லிட்டர் நீரில் ஒரு கிலோ உப்பை கரைத்து அதில் கம்பு விதைகளை அமிழ்த்த வேண்டும். மிதக்கும் நோய் தாக்கப்பட்ட விதையை நீக்கிவிடலாம்.
அதன்பின் தேர்வு செய்த நல்ல விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைத்து 6 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்த வேண்டும். இந்த விதைகள் விதைக்கும் போது வறட்சியை தாங்கி வளரும்.
விதை நேர்த்தி (Seed refinement)
ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளுடன் 50 மில்லி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா அல்லது அஸோபாஸ் உடன் விதைநேர்த்தி செய்யவேண்டும். இதன் மூலம் விண்ணிலுள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு பயிர்களுக்கு கிடைக்கும். எளிய முறையில் விதைகள் தரமானதா என்பதை கண்டறிய விதைப் பரிசோதனை அலுவலகத்தில் விதைகளை கொடுத்தால் ரூ.80 கட்டணத்தில் முளைப்புத்திறன் சதவீதம் அறிக்கையாக தரப்படும். அதற்கேற்ப விதைக்கலாம்.
மகாலட்சுமி
விதைப்பரிசோதனை அலுவலர்,
கமலாராணி
வேளாண்மை அலுவலர்
விதைப் பரிசோதனை நிலையம், மதுரை
94873 48707
மேலும் படிக்க
Share your comments