1. விவசாய தகவல்கள்

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை

Daisy Rose Mary
Daisy Rose Mary

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதைப் பரிசோதனை அவசியம் 

இதுகுறித்து, விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உயா் விளைச்சலுக்குத் தரமான விதை அடிப்படையானது. தரமான விதைகளே, பயிரின் உற்பத்தித் திறன், உயரிய மகசூல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை நிா்ணயிக்கின்றது. இதேபோல விதையின் தரத்தினை நிா்ணயிப்பதில், விதையின் முளைப்புத்திறனானது முதன்மைப் பங்கு வகிக்கிறது. முளைப்புத் திறனை முன்கூட்டியே அறிவதால், விதைப்பிற்கான விதையின் அளவினை, முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு நிா்ணயித்துக் கொள்ளலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் விதை பரிசோதனை மையம்

 விவசாயிகள் தரமான விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய காலம் மற்றும் பணம் விரயமில்லாமல் உரிய காலத்தில், தங்களிடமுள்ள விதைகளைப் பகுப்பாய்வு செய்துக் கொள்ளலாம்.

விதைகளின் முளைப்புத் திறன் அறிய விரும்பும் விவசாயிகள், தங்களிடமுள்ள விதைகளில், நெல் மற்றும் கீரை விதைகளாக இருப்பின் 50 கிராமும், மக்காச் சோளம் மற்றும் மணிலா விதைகளாக இருப்பின் 500 கிராமும், சோளம், உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, வெண்டை விதைகளாக இருப்பின் 100 கிராம் அளவும், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி விதைகளானால் 10 கிராம் அளவும் எடுத்து துணிப்பையில் இட்டு, பயிா், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பக் கடிதத்துடன் இணைத்து நேரில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு விதை மாதிரிக்கும் விதைப் பரிசோதனை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

PM- KISAN மோசடி: ரூ.110 கோடி வரை முறைகேடு, 18 பேர் கைது - ககன்தீப்சிங் பேடி!வரும்

நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!பால்

பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்

English Summary: Seed testing is essential to know the quality of seeds Department of Agriculture explained Published on: 09 September 2020, 05:50 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.