தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க ஏதுவாக, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்' என, பிஜேபி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்றுமதி (Exports)
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
நஷ்டம்(Loss)
இதன் காரணமாக, இங்கிருந்து, தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்கள், அதிகளவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. ஆனால், தேங்காய், கொப்பரைக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.
விலை நிர்ணயம் (Price)
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதை ஏற்று, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக, ஒரு கிலோ எண்ணெய் கொப்பரைக்கு, 105.90 ரூபாயும், ஒரு கிலோ பால் கொப்பரைக்கு ரூ.110 ரூபாயும் நிர்ணயம் செய்துள்ளது.
தென்னை விவசாயிகளுக்கு
மத்திய அரசின் ஆதார விலையுடன், தமிழக அரசின் பங்காக, 15 ரூபாய் சேர்த்து, 125, ரூபாயாக வழங்கினால் விவசாயிகள் பலன் பெறுவர். அதேநேரத்தில், தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், அதற்காக ஒதுக்கப்படும் மானியம், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு சென்று சேரும். இவ்வாறு, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?
PM Kisan திட்டம்: ஆண்டுக்கு 6000த்திற்கு பதில் 8000 வழங்க வாய்ப்பு!
Share your comments