வரும் 28ம் தேதி மேகதாததுவில் முற்றுகை போரட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்னை (Water problem)
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயான தண்ணீர் பிரச்னை நீண்ட காலமாகத் தொடர்கிறது.மத்திய அரசும், நீதிமன்றங்களும் தலையிட்டும் பிரச்னை முடிந்த பாடியில்லை. இந்நிலையில் மேகதாது பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
அழிக்கும் நோக்கம் (The purpose of destruction)
கர்நாடகா அரசு தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு, காவிரியின் நடுவே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கர்நாடக அரசு தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கிறது.
நிதி ஒதுக்கீடு (Allocation of funds)
இந்நிலையில் கடந்த வாரம் அம்மாநில சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அணை கட்டும் பணியை உடனடியாக துவங்குவதாகவும், முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
குடிநீர் ஆதாரம் பறிபோகும் (The source of drinking water will be depleted)
இத்திட்டம் திட்டம் நிறைவேறினால்,தமிழகத்தில் உள்ள, 30 மாவட்டங்களில், ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் பாலை வனமாகும். தேர்தல் நேரத்தில் திட்டத்தை துவக்க, தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்க கூடாது.
28ம் தேதி முற்றுகை (Siege on the 28th)
எனவே, வரும் 28ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாகச் சென்று, மேகதாது அணையை முற்றுகையிட்டு, எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளோம். இந்தப் போராட்டத்தில் 1,000 பேர் பங்கேற்க உள்ளோம். கடந்த மக்களவைத்தேர்தலின் போது, மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுத்தனர். முற்றுகையிடுவதாக அறிவித்தவுடன் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்
தற்போது தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. மேகதாதுவில் முதற்கட்டமாக கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே நேரடியாக எதிர்க்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
காளான் தாய் வித்துகள் தயாரிக்கும் எளிய வழிமுறை!
ஆற்காடு அடுத்த கலவையில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு!
விவசாயிகள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு: நிதின் கட்கரி
Share your comments