1. விவசாய தகவல்கள்

சூரியக் கூடார உலர்த்தி- மானியத்தில் அமைப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Solar Tent Dryer- How to set up on subsidy?

வேளாண் விளைபொருட்களை அறுவடைக்கு பிறகு, சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி அவற்றை பாதுகாப்பான முறையில் இந்த கூடாரங்களில் உலர வைக்க வேண்டும்.

பசுமைக் குடில் (Green house)

பிறகு அவற்றைக் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, விற்பனை செய்ய ஏதுவாக பாலிகார்பனேட் தகடுகளை கொண்டு பசுமை குடில்,
வேளாண் பொறியியல் துறையின் முலம் வழங்கப்படுகிறது.

மானியத்தில் அமைக்கலாம் (Can be set on grant)

இதனைத் தனிப்பட்ட விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள்,விவசாய குழுக்கள் போன்றவை மானியத்தில் இதனை அமைத்து கொள்ளலாம்.

சிறு குறு விவசாயிகளுக்கு 50சத மானியத்தில் வழங்கப் படுகிறது
நடப்பாண்டில் 2021-22ஆண்டில் 3.5கோடி மானியத்தில் இத் திட்டம் செயல் படத்தபட உள்ளது.

பயன்கள் (uses)

  • இதில் வேளாண் விளைபொருள் களை உலர்த்துவதால் காய்வைப்பதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகள் போன்ற வைக் கணிசமாகக் குறைகிறது.

  • விளைபொருட்களை சுகாதாரமான முறையில் இயற்கைத் தன்மை மாறாமல் உலர்த்துவதால் அவற்றின் தரம் உயர்த்தப்படுகிறது.

  • இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

  • பூஞ்சை காளான் விளைபொருள்கள் முலம் பரவுவதைத் தடுக்க முடியும்.

  • சூரிய ஒளியில் உலர்த்தியில் தேங்காய் கொப்பரையை உலர்த்துவதற்கு, சல்பர் போன்ற வேதிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

உலர வைக்கவேண்டிய விளைபொருட்கள்(Products to be dried)

தேங்காய் கொப்பரை, மிளகாய், முருங்கை கீரை, கறிவேப்பிலை, பாக்கு, தேயிலை, வாழைப்பழம், மாம்பழம், நறுமண பொருட்களான, பூண்டு, ஏலக்காய், கிராம்பு

இடவசதி (Accommodation)

விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப இடவசதிக்கேற்ப 400 முதல் 1000 சதுர அடியில் அமைத்து கொள்ளலாம்.


அங்கரிக்கப்பட்ட நிறுவனங்கள்

ஏ.சி.எஸ் பாலிகிராப்ட்

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம்

மற்றும்

வலையபட்டி,

மதுரை மாவட்டம்

தேவைப்படுவோர் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

தகவல்

அக்ரி சு சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்,

அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!

English Summary: Solar Tent Dryer- How to set up on subsidy? Published on: 21 September 2021, 10:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.