பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளுக்கு புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை, மானியக் கடன் வழங்கப்படும்.
PM-kisan
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 12வது தவணைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் 12ஆவது தவணைப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. இந்த 12ஆவது தவணையைப் பெறுவதற்கு முன்பே, அரசாங்கம் விவசாயிகளுக்கு மற்றொரு வசதியை வழங்குகிறது. இந்த வசதியை ஒவ்வொரு விவசாயியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிசான் கிரெடிட் கார்டு
தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசாங்கம் 'கிசான் கிரெடிட் கார்டு' வசதியை வழங்குகிறது. பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் விரைவில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் விவசாயிகள் எந்த தொழிலையும் தொடங்கலாம். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வசதியை அரசு வழங்கி வருகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு பெற நீங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை வைத்துக் கொண்டு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு வழங்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை தேவைப்படும். இது தவிர விதைக்கப்பட்ட பயிர்கள் பற்றிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.
ரூ.3 லட்சம்
விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 3 லட்சம் வரை குறுகிய கால கடன் வழங்கப்படுகிறது. கிசான் கிரெடிட் கார்டில் எடுக்கப்பட்ட கடனுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இதன் காரணமாக, கிசான் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்கு குறைந்த வட்டியே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
Share your comments