மதுரை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேளாண் துறை மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.இங்கு விவசாயத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கப்படாது.
-
அதேநேரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ஆழ் துணைக் கிணறு அமைக்க மானியம் வழக்கப்பட உள்ளது.
-
இதுதொடர்பாக நுண்ணீர் பாசனத் திட்டத்தின் துணை இயக்குனர் ராணி கூறுகையில்,
30 பிர்காக்கள் பாதுகாப்பான நீர் மண்டலத்தில் உள்ளன.
-
எனவே இப்பகுதிகளில் துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
எவ்வளவு மானியம் (How much subsidy)
மின்மோட்டார் அல்லது டீசல் மோட்டார் அமைக்க 15 ஆயிரம் ரூபாயும், பைப்லைன் (Pipe Line) அமைக்க 10,ஆயிரம் ரூபாயும் மற்றும் நீர்தேக்கத் தொட்டி அமைக்க 40 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ள விவசாயிகள், ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!
ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments