விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதால், வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்தி விதை உற்பத்திக்குத் திட்டமிடுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
விதைகள் கொள்முதல் (Purchase of seeds)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் வட்டாரங்களின் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் தரமான விதைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிக விலை (More expensive)
2021-2022ஆம் ஆண்டின் பத்து ஆண்டுக்கு உட்பட்ட இரங்களை விதைப்பண்ணை அமைத்த விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விதைகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் அதிகமான விலை வழங்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் மூலம் இந்த விதைகள் விதைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
விதை உற்பத்திக்கு மானியம் (Subsidy for seed production)
மேலும் விதை உற்பத்தி (certified seed production) மானியமாக ஒரு கிலோ விதை உளுந்து (வம்பம் 8,9,10), பச்சை பயறுக்கு (வம்பம்-4, கோ-8) ரூ.25/- சோளத்திற்க்கு (K-12 ,கோ-31) ரூ.30/-யும், தேசிய உணவு பாதுக்காப்பு இயக்கத்தின் (NFSM-Pulses&Nutricereals) மூலம் விவசாயின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் 10 ஆண்டுக்கு உட்பட்ட விதை விநியோகம் செய்ய ஒரு கிலோ விதை உளுந்து, பச்சை பயறுக்கு ரூ.50/- சோளத்திற்கு ரூ.30/- அல்லது 50 சதவித மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது.
தொடர்புக்கு (Contact)
விதைப்பண்ணை அமைக்க விருப்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது உதவி விதை அலுவலர்களைத் தொடர் கொள்ளவும்.
இவ்வாறு கோயம்புத்தூர் மாவட்ட தேசிய உணவு பாதுக்காப்பு இயக்கத்தின் திட்ட இயக்குநர் இரா.சித்ராதேவி, மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் கா.சூர்ய பிரகாஷ் ஆகியோர் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments