சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மானியத்தை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேசிய அளவிலானத் திட்டம் (National level plan)
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் (Subsidy)
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், உளுந்து விதை வாங்க, கிலோவுக்கு, ரூ.30 அல்லது விற்பனை விலையில், 50 சதவீதம் எது குறைவோ, அந்த அளவுக்கு மானியம் வழங்கப்படும்.
அதிகாரிகள் தகவல் (Officials informed)
இதேபோல் கம்பு, ராகி, சாமை, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கிலோவுக்கு, 30 ரூபாய், நிலக்கடலை சாகுபடி செய்ய, 40 ரூபாய் மானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உயிர் உரத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ.150, நுண்ணூட்டம் வழங்க, ரூ.500 மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சிறு தானியங்களின் முக்கியத்துவம் (The importance of small grains)
சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது.
திரவ நிலையில் (In the liquid state)
சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது.
வாதம் (Paralytic attack)
இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!
Share your comments